ஞான நூல் கற்க வேண்டியதில்லை!! தேவாரப்பாடலும் விளக்கமும்..

பாடல்..

நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானம்
கற்கும் சரக்கன்று காண்.

விளக்கம்..

      நல்லருளைப் பொழிவதும் யானைமுகத்தைப் போன்றதுமான பிரணவத் திருமுகத்தையுடையவரும் எப்பொழுதும் இளமையுள்ளவருமாகிய விநாயகக் கடவுளைப் பொருந்தி வழிபடுவாராயின் (ஒருவருக்கு) ஞான சாத்திரம் வருந்திக்கற்க வேண்டிய பண்டம் அன்று என்பதே திரண்ட பொருளாகும்.