ஜோதிகாவின் அடுத்த படத்தில் இணையும் ரேவதி!

ஜோதிகாவும் ரேவதியும் கடந்த 90கள், மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகைகளாக இருந்தாலும் இருவரும் இதுவரை இணைந்து நடித்ததில்லை. இந்த நிலையில் தற்போது ஜோதிகாவின் அடுத்த படத்தில் ரேவதி நடிக்கவுள்ளர்.

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் ஜோதிகா இதுவரை நடித்திராத முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ஜோதிகாவின் தோழியாக ரேவதி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

பிரபுதேவா, ஹன்சிகா நடித்த ‘குலேபகாஅவலி இயக்கிய இயக்குனர் எஸ்.கல்யாண் இயக்கும் இந்த படத்தில் ஜோதிகா, ரேவதியுடன் யோகிபாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் முதல் தொடங்கவுள்ளது.