ஜெயலலிதா மரணம்: பிரதமர் மோடியையும் விசாரிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து நீதியரசர் ஆறுமுகச்சாமி அவர்களின் ஆணையம் கடந்த சில மாதங்களாக விசாரணை செய்து வருகிறது. இந்த விசாரணை கமிஷன் முன் பல்வேறு கட்சி தலைவர்கள், மருத்துவர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் ஆஜராகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில், பிரதமர் மோடியையும் விசாரிக்க எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மு.க.ஸ்டாலினின் இந்த கோரிக்கையை ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

ஒரு மாநில முதலமைச்சர் மருத்துவமனையில் உயிருக்காக போராடியபோது நாட்டின் பிரதமரான மோடி ஏன் மருத்துவமனைக்கு வந்து பார்க்கவில்லை என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்