ஜெயம் ரவியின் 25 வது படம் அறிவிப்பு

கடந்த 2004ல் வெளியான ஜெயம் படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை தொடங்கிய ஜெயம் ரவி இதுவரை கடந்த 15 வருடங்களில் 24 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

படத்துக்கு படம் காமெடி , ஆக்சன் என களமிறங்கும் ஜெயம் ரவி இதற்கு முன் அடங்க மறு படத்தில் நடித்தார்.

அடங்க மறு படம் மிகப்பெரும் வெற்றியை ஜெயம் ரவிக்கு பெற்று கொடுத்தது.

இந்த நிலையில் சுஜாதா விஜயகுமார் மீண்டும் ஜெயம் ரவியை வைத்து படம் தயாரிக்கிறார்.

படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படத்தை ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லட்சுமணன் இயக்க இருக்கிறார்.

படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

டி. இமான் இப்படத்துக்கு இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.