ஜப்பான் ஏன் இயந்திர வாக்குப்பதிவை அமல்படுத்தவில்லை? அகிலேஷ் யாதவ் கேள்வி


உலகில் எலக்ட்ரானிக் துறையில் முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டில் கூட தேர்தலின்போது இயந்திர வாக்குப்பதிவை அமல்படுத்தவில்லை. ஏனெனில் அதில் முறைகேடு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது என்பதால்தான்.

தேர்தலில் மோசடி என்பது அரசியல் கட்சிகளுக்கு மட்டும் பாதிப்பு என்று எண்ணக்கூடாது. இது நாட்டின் ஜனநாயகத்திற்கே ஆபத்து. இதனை மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று முன்னாள் உபி முதலமைச்சரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

நேற்று லண்டனில் நடந்த காணொளி காட்சி ஒன்றின்மூலம் சைபர் கிரைம் நிபுணர் ஒருவர் ‘இந்தியாவில் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது