ஜப்பானில் திரையிடப்படும் ‘சர்வம் தாளமயம்”

ஜப்பானில் திரையிடப்படும் 'சர்வம் தாளமயம்"

sarvam thala mayam 1

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் ‘சர்வம் தாளமயம்’. ‘மின்சார கனவு’ மற்றும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து வரும் கிறிஸ்துமஸ் திருநாளில் இந்த படம் வெளியாகவுள்ளது

இந்த நிலையில் ஜப்பானில் நடைபெறவுள்ள டோக்கியோ திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் அக்டோபர் 28ஆம் தேதியும், அக்டோபர் 30ஆம் தேதியும் திரையிடப்படவுள்ளதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள மிகவும் புகழ் பெற்ற TOHO என்ற திரையரங்கில் இந்த படம் திரையிடப்படவுள்ளதாகவும் இந்த வாய்ப்பை ஜப்பானில் உள்ள தமிழர்கள் மிஸ் செய்துவிட வேண்டாம் என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜிவி பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, நெடுமுடிவேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் ஜப்பான் ரசிகர்களை கவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்