Connect with us

சோலோவாக ரிலீஸ் ஆகிறதா ‘தில்லுக்கு துட்டு 2’?

பொழுதுபோக்கு

சோலோவாக ரிலீஸ் ஆகிறதா ‘தில்லுக்கு துட்டு 2’?

வரும் வெள்ளியன்று சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாளமயம்’, ராமின் ‘பேரன்பு’, சகா ஆகிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில் அடுத்த வாரம் அதாவது பிப்ரவரி 7ஆம் தேதி எந்த படத்தின் ரிலீஸ் தேதியும் இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் சந்தானம் நடிப்பில் ராம்பாலா இயக்கியுள்ள தில்லுக்கு துட்டு 2 திரைப்படத்திற்கு இன்று ‘யூஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை சந்தானம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அனேகமாக இந்த படம் சோலோவாக ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தானம் ஜோடியாக தீப்தி நடித்திருக்கும் இந்த படத்தில் ஷிரிதா சிவதாஸ், ராஜேந்திரன், ஊர்வசி உள்பட பலர் நடித்துள்ளனர். ஷபிர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் உருவான ‘சகா’ இந்த வாரம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top