சென்னை மெட்ரோ ரயிலில் இன்றும் இலவச பயணம்:


சென்னை மெட்ரோ ரயில்களில் பிப்ரவரி 10,11,12 ஆகிய மூன்று நாட்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் பிப்ரவரி 13ஆம் தேதியான இன்றும் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல் -டி.எம்.எஸ். வரையிலான புதிய மெட்ரோ வழித்தட சேவை தொடங்கப்பட்ட நிலையில் மெட்ரோ ரயில் பயணம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த கடந்த மூன்று நாட்களாக இலவச பயணத்திற்கு மெட்ரோ நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

இந்த இலவச பயணம் நேற்றுடன் முடிவடைந்த நிலைஇல் இன்றும் அதாவது பிப்ரவரி 13ஆம் தேதி வரை இலவச பயணம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பயணம் அதிகரித்தால் மெட்ரோ நிர்வாகத்திற்கு அதிக வருவாய் கிடைப்பது மட்டுமின்றி அண்ணா சாலை உள்பட முக்கிய பகுதிகளில் பெருமளவு டிராபிக் பிரச்சனை தீரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.