சென்னை அருகே கலைஞர் அறிவாலயம்: முக ஸ்டாலின் திட்டம்


திமுகவின் தலைமை அலுவலகமாக சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா அறிவாலயம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தை கட்டிடமாக் பார்க்காமல், தனது உயிருக்கு நிகராக நேசித்தவர் கருணாநிதி. எனவே எந்த முக்கிய முடிவுகளாக இருந்தாலும் இங்குதான் எடுக்கப்படும்

இந்த நிலையில் அண்ணா அறிவாலயம் கட்டிடத்திற்கு நிகராக ‘கலைஞர் அறிவாலயம்’ ஒன்றை கட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்., இதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே கடம்பாரி மற்று பெருமாளேரி கிராமங்கள் இருக்கும் பகுதியில், சுமார் 12 ஏக்கர் நிலம் திமுக அறக்கட்டளை பெயரில் வாங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதற்கான பத்திரப்பதிவு நடந்துள்ளது

இன்னும் சில மாதங்களில் ”கலைஞர் அறிவாலயம்’ கட்டும் பணி தொடங்கப்படும் என்றும், மாநில அளவில் நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டங்கள் இனிமேல் இங்குதான் கூட்டப்படும் என்றும் திமுக வட்டாரக்கள் கூறுகின்றன.