Connect with us

சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல வெறும் 30 நிமிடங்கள்: அதிவேக கார் அறிமுகம்!

செய்திகள்

சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல வெறும் 30 நிமிடங்கள்: அதிவேக கார் அறிமுகம்!

மணிக்கு 900 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் அதிநவீன கார் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் சென்னையிலிருந்து மதுரைக்கு அரை மணி நேரத்தில் சென்று விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது

ஜெட் இஞ்சின் பொருத்தப்பட்டுள்ள அதி நவீன கார் ஒன்றை ஆப்பிரிக்காவின் கலஹாரி என்ற பாலைவனத்தில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது

இதில் ஒரு மணி நேரத்தில் இந்த கார் 900 கிலோ மீட்டர் சென்று சாதனை செய்தது. பிரிட்டனைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ள இந்த கார் மணிக்கு 900 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் என்பதை தற்போது கார் உற்பத்தியாளர்கள் உறுதி செய்தனர்
இந்த கார் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படும் என்று இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த காரை செலுத்தக் கூடிய அளவுக்கு அதி நவீன சாலை வசதி இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். இந்தியாவின் உள்ள பெரும்பாலான சாலைகளில் இந்த கார் செல்லும் அளவுக்கு இல்லை என்பதே உண்மை

Continue Reading

அதிகம் படித்தவை

To Top