Connect with us

சூரிய கிரகண நேரத்தில் பிரியாணி விருந்து வைத்த திகவினர்

செய்திகள்

சூரிய கிரகண நேரத்தில் பிரியாணி விருந்து வைத்த திகவினர்

பொதுவாக இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக செயல்படுவதில் குறியாக இருப்பவர்கள் திராவிடர் கழகத்தினர் என்பது தெரிந்ததே

தாலி அறுப்பு நிகழ்ச்சி உள்பட பல இந்து மதங்களுக்கு எதிரான விஷயங்களை செய்து வரும் திகவினர், சூரிய கிரகணத்தின்போது பிரியாணி விருந்து வைத்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பொதுவாக சூரிய கிரகணத்தின்போது சாப்பிடக் கூடாது என்றும் அவ்வாறு சாப்பிட்டால் தோஷம் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் இதனை பொய்யாக்கும் வகையில் தாங்கள் சூரிய கிரகணத்தின்போது பிரியாணி விருந்து சாப்பிட போவதாக தாராபுரம் மாவட்ட திகவினர் அறிவித்தனர்

இதனையடுத்து அங்கு உள்ள பெரியார் சிலை அருகே பிரியாணி விருந்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. சூரிய கிரகணம் என்பது விஞ்ஞான ரீதியில் எந்த ஒரு தீங்கும் இல்லாத ஒரு நிகழ்வு என்றும் இதனை நிரூபிக்கவே பிரியாணி விருந்து வைத்ததாகவும் இந்த கிரகணத்தால் மனிதர்களுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படாது என்பதை நிரூபிக்கவே இதை செய்ததாகவும் திகவினர் தெரிவித்துள்ளனர்

இதுவொரு வகையில் ஏற்று கொள்ளக்கூடியது என்றாலும் பெரும்பாலான மக்களின் நம்பிக்கையை உடைக்கும் வகையில் இவ்வாறு செய்தது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
To Top