Connect with us

சீமானுக்கு சம்மன்: நாளை ஆஜராக உத்தரவு

செய்திகள்

சீமானுக்கு சம்மன்: நாளை ஆஜராக உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து சமீபத்தில் சீமான் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தைக் கூறினார்

இதற்கு காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சி கொடுத்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

இந்த வழக்கின் அடிப்படையில் சீமான் எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரித்து வரும் ஒய்வு பெற்ற அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் நாளை தூத்துக்குடியில் உள்ள ஆணைய அலுவலகத்தில் சீமான் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top