சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா ஒரே நாளில் இடமாற்றம்


கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டிருந்த முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நேற்று மீண்டும் சிபிஐ இயக்குனராக பொறுப்பேற்ற நிலையில் ஒரே நாளில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இன்று டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் ஒன்றில் சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மாவை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனைஅடுத்து சிபிஐ இயக்குனர் பொறுப்பை அலோக் மீண்டும் இன்று இழந்தார். அவருக்கு பதிலாக இடைக்கால சிபிஐ இயக்குனராக நாகேஸ்வர ராவ் தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீயணைப்புத்துறை, குடிமை பாதுகாப்பு, ஊர்க்காவல்படை இயக்குநராக அலோக் வர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமரின் இந்த அதிரடி உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது