சிவகார்த்திகேயனை வாக்களிக்க வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை

கடந்த 18ம் தேதி இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு முழுவதும் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. இதில் சினிமா நட்சத்திரங்கள் பலருக்கு வாக்கு இல்லாமல் போனது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை. நடிகரும் இயக்குனருமான ரமேஷ்கண்ணாவுக்கு இது போல் பெயர் இல்லாமல் போனது அவர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. அது போல் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை இருப்பினும் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி கூறுகையில்

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார். மேலும்  சென்னை வளசரவாக்கம் வாக்குச்சாவடியில் வாக்காளர் அடையாள அட்டையை காட்டி சிவகார்த்திகேயன் வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.