Connect with us

சிலம்பம் ஆசிரியையாக மாறிய சமந்தா

பொழுதுபோக்கு

சிலம்பம் ஆசிரியையாக மாறிய சமந்தா

நடிகர்கள் சிலம்பாட்டம் ஆடும் கேரக்டர்களில் நடிப்பது சர்வ சாதாரணமானது. எம்ஜிஆர், சிவாஜி முதல் சிம்பு வரை கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களும் சிலம்புச்சண்டை காட்சிகளில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகை சமந்தா ஒரு படி மேலே போய், சிலம்பம் ஆசிரியையாக நடித்துள்ளாராம். சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்துள்ள ‘சீமராஜா’ படத்தில்தான் சமந்தா சிலம்பம் மாஸ்டராக நடித்துள்ளார்

‘சுதந்திரதேவி’ என்ற கேரக்டரில் சமந்தா நடித்துள்ள இந்த கேரக்டர் இதுவரை தமிழ் திரையுலகில் யாரும் நடித்திராத வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்காக அவர் நிஜமாகவே சிலம்பம் பயின்றாராம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகிபாபு, மனோபாலா, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்

 

Continue Reading

அதிகம் படித்தவை

To Top