சிம்பு, கெளதம் கார்த்திக்கின் கன்னட படம்

சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்காக லண்டனில் தங்கி உடல் குறைப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். வெங்கட் பிரபு மாநாடு படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில் சிம்பு அடுத்து நடிக்க இருக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மஃப்டி’ என்னும் கன்னட படத்தின் தமிழ் ரீமேக் இது. கன்னடத்தில் ஸ்ரீமுரளி நடித்த கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக்கும், சிவராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் சிம்புவும் நடிக்கிறார்.
 

கன்னடத்தில் மஃப்டி படத்தை இயக்கிய நார்தன்தான் தமிழிலும் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற தேர்வு நடைபெற்று வருகிறது. இரத்தம் தெறிக்க வன்முறைக் காட்சிகள் பல கன்னட படத்தில் இருக்கும், அதை மட்டும் தமிழில் கொஞ்சம் குறைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.