சாக்ஷியிடம் மன்னிப்புக் கேட்ட தீராத விளையாட்டுப் பிள்ளை..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது, 4 வாரங்களை சிறப்பாக முடித்த நிலையில், 5 வாரத்திற்குள் வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்துள்ளனர் போட்டியாளர்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன் கவினும் சாக்ஷியும் காதல் கொண்டனர், இதனை இருவரும் வெளிப்படுத்திக் கொண்டனர், இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருந்து காதலித்து வந்த நிலையில், மறுபுறம் லோஸ்லியாவையும் காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சாக்‌ஷி கொடுத்த சாக்லெட்டை, லோஸ்லியாவிடம் கொடுத்து லோஸ்லியா கொடுத்த சாக்லெட்டை கவின் சாப்பிட்டார். 

சாக்ஷியிடம் மன்னிப்புக் கேட்ட தீராத விளையாட்டுப் பிள்ளை..!!

இது கவின் சாக்ஷி காதலுக்கு ஒரு முற்றுப்புள்ளியாக அமைந்தது. ஒவ்வொரு முறையும் கவின் செய்யும் செயல்கள் சாக்ஷியைவிட்டு விலகி லாஸ்லியாவுடன் நெருக்கம் காட்டுவதாகவே இருக்கும்.

விளையாட்டாக செய்கிறேன் என்ற பெயரில், 4 பெண்களைக் காதலிப்பது, அதில் ஒரு பெண்ணிடம் காதலை வெளிப்படுத்துவது, 3 நாட்களுக்குப் பின் ப்ரேக் அப் செய்வது, மற்றொரு பெண்ணிடம் காதலில் விழுவது, கடைசியில் இது நட்பு மட்டுமே என்று கூறுவது என தீராத விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கிறார் கவின்.

. நேற்றைய நிகழ்ச்சியின் மூலம் கவின் தனது தவறை உணர்ந்தார். தன் தவறை உணர்ந்த அவர் சாக்‌ஷியிடம் மன்னிப்பு கேட்டார்.