சர்வம் தாளமயம்’ படத்தின் ரிலீஸ் தேதி!


ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ராஜிவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான படம் சர்வம் தாளமயம். இப்படம் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் படக்குழு இன்று தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு வரும் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதாக டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது .அந்த டுவிட் பின்வருமாறு:-

மேலும் இப்படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாக நடித்துள்ளார். இப்படம் இசையை மையமாக கொண்டிருப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது