சர்கார் விவகாரம்: ரஜினி-கமல் கண்டனம்

சர்கார் விவகாரம்: ரஜினி-கமல் கண்டனம்

rajini-kamal

விஜய் நடித்த ‘சர்கார்’ பிரச்சனை கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த படத்தின் குழுவினர்களுக்கு ஆதரவாக தற்போது கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட திரையுலகினர்களும் களத்தில் குதித்துள்ளனர்.

சர்கார் விவகாரம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘ணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

அதேபோல் கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ‘முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்.

கமல், ரஜினி இருவருமே ‘சர்கார்’ படக்குழுவினர்களுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.