Connect with us

கோலிக்கு இப்படி நடந்திருக்கக்கூடாது- கொந்தளிக்கும் ரசிகர்கள்

விளையாட்டு

கோலிக்கு இப்படி நடந்திருக்கக்கூடாது- கொந்தளிக்கும் ரசிகர்கள்

லண்டன்:

இந்தியா பாகிஸ்தான் போட்டி சிறப்பாக நடைபெற்று, இந்திய அணி 7 வது வெற்றியைப் பெற்று வெற்றி வாகையை தனதாக்கியுள்ளது. அப்போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய சர்ச்சையாகி உள்ளது. நேற்றைய போட்டியில் இந்திய வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை ஆட்டத்தின் தொடக்கம் முதலே வெளிப்படுத்தினர்.

கோலிக்கு இப்படி நடந்திருக்கக்கூடாது- கொந்தளிக்கும் ரசிகர்கள்

கோலிக்கு இப்படி நடந்திருக்கக்கூடாது:

ரோஹித் சர்மா மொத்தம் 113 பந்துகளில் 140 ரன்கள் எடுத்தார். கோலி 65 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். மொத்தம் 50 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. அனைத்தும் சீராக சென்று கொண்டிருக்கையில், கோலி அவுட்டான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

என்னதான் நடந்தது:

விராட் கோலி 77 ரன்கள் எடுத்தநிலையில் பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது அமிர் பந்தில் அவுட்டாகி வெளியே சென்றார். ஆனால் உண்மையில் அவர் அந்த பந்தில் ஆட்டமிழக்கவில்லை. நடுவர் அவுட் கொடுக்காமலேயே இவர் அவுட் என்று நினைத்து வெளியேறிவிட்டார்.

உறுதியாக அவுட் இல்லை:

பந்து அவர் பேட்டை கடந்து சென்ற போது டொக் என்று சத்தம் கேட்டதுடன் பேட்டும் லேசாக அதிர்ந்தது. இதனால் பேட்டில் பந்து பட்டதாக அவர் நினைத்தார். ஆனால் ரிப்ளேயில்தான் கோலி அவுட்டில்லை என்பது தெரியவந்தது.

எல்லாம் இந்த பேட் செய்த வேலை:

கோலியின் பேட்டில் ஹேண்டில் லூஸாக இருந்துள்ளது. அதனால் சத்தம் வந்திருக்கிறது, கோலி பேட்டை சோதனை செய்து பார்த்தபோது, பந்து பட்டு சத்தம் வரவில்லை, பேட் ஆடி சத்தம் வந்தது என்பதனைக் கண்டுபிடித்து சொன்னார்.

கோபத்தில் ரசிகர்கள்:

கோலி பயன்படுத்தும் பேட் மிகப்பெரிய நிறுவனத்தின் ஸ்பான்சர், பேட்டில் குறைபாடு இல்லையெனில் கோலி நிச்சயம் சதம் அடித்திருப்பார் என்று ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்.





Continue Reading

அதிகம் படித்தவை

To Top