Connect with us

கொரோனாவால் பாதித்த விஜய் பட இயக்குனருக்கு உதவிய பிரபல தயாரிப்பாளர்

பொழுதுபோக்கு

கொரோனாவால் பாதித்த விஜய் பட இயக்குனருக்கு உதவிய பிரபல தயாரிப்பாளர்

உலகிலுள்ள மனித இனத்தையே ஆட்டுவித்து வரும் கொரோனா வைரஸ் சாதாரண பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளையும், திரையுலக பிரபலங்களையும் பதவியில் இருப்பவர்களையும் தாக்கி வருவது தெரிந்ததே.

அந்த வகையில் விஜய், பிரியங்கா சோப்ரா நடித்த ’தமிழன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மஜித் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் குணமாகி உள்ளார்

இருப்பினும் அவர் மருத்துவ கட்டணத்தை கட்டுவதற்கு பணம் இல்லாமல் தவித்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் கேஜேஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் அவர்கள் மஜித்தின் மருத்துவ பில்லை செட்டில் செய்து உதவி செய்துள்ளார். அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்ட கேஜேஆர் ராஜேஷின் இந்த உதவிக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

விஜய்சேதுபதி நடித்து வரும் ‘க/பெ ரணசிங்கம்’ உள்பட ஒருசில படங்களை கேஜேஆர் ராஜேஷ் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top