கைதானர் பிரியங்கா காந்தி… கோபத்தில் ராகுல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிலத்தில் இருந்து பழங்குடியின விவசாய மக்கள் வெளியேற மறுத்ததால் அந்த கிராமத்தின் தலைவர் யோகா தத் தலைமையிலான 200 பேர் கும்பல், 32 டிராக்டர்களில் சென்று கொடூரமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சோன்பத்ரா பகுதிக்கு பிரியங்கா காந்தி இன்று செல்ல முயன்றார்.
ஆனால் அவரது வாகனத்தை நடுவழியில் தடுத்து நிறுத்திய போலீசார் சோன்பத்ராவுக்கு செல்ல அனுமதியில்லை என்றனர்.

கைதானர் பிரியங்கா காந்தி…  கோபத்தில் ராகுல்

இதனால் ஆத்திரம் அடைந்த பிரியங்கா காந்தி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தார். கொல்லப்பட்ட குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் செல்ல விரும்புகிறேன். என் மகன் வயது உள்ள சிறுவனை கொன்று இருக்கிறார்கள். 

மேலும் தர்ணாவை நிறுத்த மறுத்ததால் பிரியங்கா காந்தி போலீசார் கைது செய்து அரசு வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது பிரியங்கா காந்தி அவர்களிடம் என்னை எங்கே அழைத்துச்செல்கிறீர்கள். எங்கு வருவதாக இருந்தாலும் நான் வர தயாராக இருக்கிறேன் என்றார். 

இந்நிலையில் தற்போது உத்திர பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தி கைதாகி உள்ளார். இதுபோன்ற செயல்கள் பாஜக அரசின்கீழ் மக்கள் பாதுகாப்பாக வாழ இயலாது என்பதைக் காட்டுகிறது என ராகுல் கூறியுள்ளார்.