செய்திகள்
கூகுள் நடத்திய போட்டியில் 7 வயது இந்திய சிறுமி வெற்றி

கூகுள் நிறுவனம் நடத்திய போட்டி ஒன்றில் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
’குழந்தைகள் விரும்பும் எதிர்கால உலகம்’ என்ற பொருளின் அடிப்படையில் போட்டி ஒன்று உலகம் முழுவதும் உள்ள சிறுவர்களுக்காக கூகுள் நிறுவனத்தால் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் இந்தியா உள்பட பல நாடுகளில் இருந்து ஏராளமான சிறுவர் சிறுமிகள் கலந்து கொண்ட நிலையில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமிக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது
மரங்கள் கால் முளைத்து நடந்து நடப்பது போன்றும், ஓடுவது போன்றும், சைக்கிள் ஓட்டுவது போன்றும் இவர் வரைந்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்த அந்த சிறுமி ’எதிர்காலத்தில் மரங்களுக்கு தீ வைக்கப்பட்டாலோ, அல்லது மரங்கள் வெட்டப்பட்டாலோ, அவற்றில் இருந்து தப்பித்துக் கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த டூடூலை தான் வரைந்ததாக அவர் தெரிவித்தார்
இந்த சிறுமி வரைந்த இந்த டூடுல் கடந்த 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று கூகுள் தனது பக்கத்தில் பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது
