குடும்ப கட்சியாக மாறிய தேமுதிக

premalatha

premalatha

திமுகவை குடும்ப கட்சி என பலமுறை விமர்சனம் செய்த விஜயகாந்த், தனது கட்சியான ‘தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கட்சியின் தலைவராகவும், பொதுச்செயலாளராகவும் அவரே உள்ளார். மேலும் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பில் அவரது மச்சான் எல்.கே.சுதீஷ் உள்ளார்.

இந்த நிலையில் தேமுதிக கட்சியின் பொருளாளராக இன்று விஜயகாந்த் மனைவி பிரேமலதா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இக்கட்சியின் பொருளாளராக இருந்த இளங்கோவன் என்பவர் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை கட்சியின் சாதாரணஉறுப்பினராக இருந்த பிரேமலதா தற்போது பொருளாளராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல கொள்கை பரப்பு செயலாளராக இருந்த வி.சி.சந்திரகுமார் திமுகவில் இணைந்த‌தால், அந்த இடம் வெற்றிடமாகவே இருந்து வந்த‌து. இந்நிலையில் அழகாபுரம் மோகன்ராஜ் என்பவர் புதிய கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.