Connect with us

காவிரித்தாயும் நடிகர் விவேக்கும் உரையாடிய கவிதை

பொழுதுபோக்கு

காவிரித்தாயும் நடிகர் விவேக்கும் உரையாடிய கவிதை

காமெடி நடிகர் விவேக் தனது டுவிட்டரில் கடந்த சில நாட்களாக காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்த தனது கருத்துக்களை பொதுமக்களிடம் பகிர்ந்து கொண்டு வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அவரும் காவிரித்தாயும் உரையாடுவது போன்ற ஒரு கவிதையை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அந்த கவிதை இதோ:

நான்:- காவிரித் தாயே. கருணைத் தாயே.
கன்னட மண்ணில் பூ விரித்தாயே.
ஏன், தமிழ்மகன் கேட்டால் கை விரித்தாயே?.

காவிரி:- முத்து மகனே. முட்டாள் மகனே.
கைவிட்டது நானா நீயா?.
செழித்துப் பாய்ந்தேன்; நீ சேமித்தாயா?.
ஆழியில் (கடலில்) கலக்குமுன் அணை செய்தாயா?.

நான்:- இனி நான் என்ன செய்ய?, சொல்வாயா?.

காவிரி:- சினிமா பார்த்து சிரி. கிரிக்கெட், பாப்கார்ன் கொரி. மழுங்கிப்போனதே உன் வெறி.

நான்:- தாயே என்னை மன்னிப்பாயா?.

காவிரி:- எழுந்து நில். தயக்கம் கொல்.
இரைப்பை நிரப்புவது கலப்பை.
இதை உணராதவன் வெறும் தோல் பை.
நான் உனக்கும் அன்னை.
கன்னடர் உந்தன் உடன் பிறப்பு.
காவிரியும் உனது நீர்ப்பரப்பு.
இதை உரக்கச் சொல்.
உரிமை வெல்.

Continue Reading
To Top