காங்கிரஸ் கட்சியிடம் தேர்தலில் போட்டியிட அனுமதி கேட்ட பிரபல நடிகை

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் நடிகை அம்பரீஷ். இவர் சமீபத்தில் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இந்த நிலையில் இவருடைய மனைவியும் நடிகையுமான சுமலதா, தனது கணவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாண்டியா தொகுதியிலி தனக்கு போட்டியிட அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியபோது, ‘எனது கணவர் மாண்டியா தொகுதி மக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்ததார். எனவே என்னை அதே தொகுதியின் வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் சுமலதா தெரிவித்துள்ளார்.

நடிகை சுமலதா திசை மாறிய பறவைகள், முரட்டுக்காளை, கழுகு, கரையெல்லாம் செண்பகப்பூ, ஒரு ஓடை நதியாகிறது உட்பட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.