கல்விக்கடன் ரத்து என்ற திமுகவின் வாக்குறுதி சாத்தியமா?


தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளபட்டி கிராமத்தில் நடந்த கிராம சபையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

திமுக ஆட்சிக்கு வந்தால் ஒருவர் யார் என்றாலும் எந்த கட்சியை சேர்ந்தவர் என்றாலும், பாரபட்சமின்றி முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் நாட்டின் எதிர்காலமாக திகழும் மாணவர்களின் நலன்கருதி, கல்விக்கடன் முழுவதும் ரத்து செய்யப்படும் என்று கூறினார்.

வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ரிசர்வ் வங்கி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிக்கடனை திமுக ஆட்சிக்கு வந்தால் மாநில அரசு எப்படி தள்ளுபடி செய்ய முடியுமென நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்,.