Connect with us

கமல்ஹாசனுடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால்?

பொழுதுபோக்கு

கமல்ஹாசனுடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால்?

kamal kajal

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கர் பிரமாண்டமாக உருவாகவிருக்கும் இந்த படத்தின் நாயகி யார்? என்ற மிகப்பெரிய கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

‘இந்தியன்’ முதல் பாகத்தில் மனிஷா கொய்ராலா மற்றும் ஊர்மிளா நடித்த நிலையில் ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவும், இதுகுறித்த அறிவிப்பு மிகவிரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

வரும் டிசம்பர் 7ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளதாகவும் தெரிகிறது. படப்பிடிப்புக்கு முன் இந்த படம் குறித்த முறையான அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிடும் என தெரிகிறது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top