கண்ணே கலைமான் டிரைலர் எப்போது?


தேசிய விருது பெற்ற ‘தென்மேற்கு பருவக்காற்று’ என்ற படத்தை இயக்கிய சீனு ராமசாமி தற்போது ‘கண்ணே கலைமானே’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார்.

பிப்ரவரி மாதம் இந்த படம் வெளியாக இருப்பதாக ஏற்கனவே படக்குழுவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 9ஆம் தேதி படத்தின் டிரைலர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உதயநிதி தனது டுவிட்டரிலும் உறுதி செய்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், தமன்னா, சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி, ஷாஜி சென், வசுந்தரா காஷ்யப், வெற்றிக்குமாரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்க்கு ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவும் காசி விசுவநாதன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.