Connect with us

கடைசி ஓவரில் சொதப்பிய தினேஷ் கார்த்திக்: இந்தியா அதிர்ச்சி தோல்வி

விளையாட்டு

கடைசி ஓவரில் சொதப்பிய தினேஷ் கார்த்திக்: இந்தியா அதிர்ச்சி தோல்வி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று ஹாமில்டன் நகரில் நடைபெற்றது. இந்த நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்தது. 213 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 208 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி தொடரையும் இழந்தது.

கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் தினேஷ் கார்த்திக் முதல் பந்தில் 2 ரன்களும், 2வது, 3வது பந்தில் ரன் ஏதும் எடுக்காமலும் சொதப்பினார். 4வது பந்திலும் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இருப்பினு 6வது பந்தில் தினேஷ் கார்த்திக் ஒரு சிக்சர் அடித்தும் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுக்க முடியவில்லை

ஸ்கோர் விபரம்:

நியூசிலாந்து அணி: 212/4 20 ஓவர்கள்

செய்ஃபெர்ட்: 42 ரன்கள்
முன்ரோ: 72 ரன்கள்
கிராந்தோம்: 30 ரன்கள்

இந்திய அணி: 208/6 20 ஓவர்கள்

ஷங்கர்: 43 ரன்கள்
ரோஹித் சர்மா: 38 ரன்கள்
தினேஷ் கார்த்திக்: 33 ரன்கள்

ஆட்டநாயகன்: முன்ரோ
தொடர் நாயகன்: செய்ஃபெர்ட்

Continue Reading
To Top