Connect with us

ஒரே நாடு ஒரே நாள் ஊதியம்: மத்திய அரசின் அசத்தல் திட்டம்

செய்திகள்

ஒரே நாடு ஒரே நாள் ஊதியம்: மத்திய அரசின் அசத்தல் திட்டம்

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒரே நாளில் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வழிவகை செய்யும் வகையில் புதிய நடைமுறையை மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறியுள்ளார்.

நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார், ‘ குறிப்பிட்ட ஒருநாள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு மாதமும் அந்த நாளில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படும். இது தொடர்பான சட்டத்தை விரைவில் நிறைவேற்ற பிரதமர் மோடி ஆர்வமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போது ஒருசில தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு 15ஆம் தேதிக்கும் பின்னரும் கொடுக்காமல் இழுத்தடித்து வரும் நிலையில் இந்த சட்டம் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி அனைத்து தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் கிடைப்பதையும் இதன் மூலம் உறுதி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து துறைகளிலும் ஒரேமாதிரியான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்யவும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்தார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top