ஒரு மில்லியன் பாலோயர்ஸ்களுடன் வரு சரத்

டுவிட்டரில் மிக ஆக்டிவாக இருக்கும் திரை நட்சத்திரங்களில் வரலட்சுமி சரத்குமாரும். எப்போதும் துரு துருவென ஸ்டேட்டஸ்கள் ஏதாவது இவரது டுவிட்டர் பக்கத்தில் பார்க்கலாம்.

தொடர்ந்து வில்லி கதாபாத்திரங்களிலும் தொடர் படங்களிலும் நடித்து பெயர் வாங்கி வருவதால் இவருக்கு டுவிட்டரில் பாலோயர்ஸ்கள் அதிகரிக்க தொடங்கினர்.

இந்நிலையில் வரலட்சுமி சரத்குமாரை டுவிட்டரில் பாலோ செய்யும் ரசிகர்கள் மிக அதிகமாகி 1 மில்லியன் ரசிகர்கள் வரலட்சுமி சரத்குமாரை பாலோ செய்து வருகிறார்கள்.

இதற்காக மகிழ்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வரலட்சுமி அனைவருக்கும் தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.