ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மோசமான சாதனை

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனை செய்தார் என்பதையும் இந்திய அணி இந்த போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதையும் சற்று முன்னர் பார்த்தோம்

இந்த நிலையில் இதே போட்டியில் ஒரு மோசமான சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஒரு போட்டியில் இரண்டு கேப்டன்கள் டக் அவுட் ஆகவில்லை என்பதுதான் வரலாறாக இருந்து வருகிறது. ஆனால் இந்த இன்றைய போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அவர்களும் மேற்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொல்லார்டு அவர்களும் தாங்கள் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி மோசமான சாதனையை நிகழ்த்த காரணமாக இருந்திருக்கின்றனர்

இத்தனை வருட ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஒரு போட்டியில் இரண்டு கேப்டன்கள் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனது இல்லை என்பதும் இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக இந்திய அணியின் கேப்டனும் இருக்கின்றார் என்பதே பலரது கவலையாக உள்ளது