Connect with us

ஒப்புதல் வாக்குமூலம் எதிரொலி: பிரபல ஊடகத்திற்கு தடை போட்ட திமுக!

செய்திகள்

ஒப்புதல் வாக்குமூலம் எதிரொலி: பிரபல ஊடகத்திற்கு தடை போட்ட திமுக!

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனுஷ் நடித்த ’அசுரன்’ படத்தைப் பார்த்தாலும் பார்த்தார், அந்த படத்தை பார்த்தததில் இருந்து அவரை ஏழரை சனி பிடித்து விட்டதாக அவரது கட்சி தொண்டர்களே சிலர் கூறி வருகின்றனர்

அந்த படத்தை பார்த்துவிட்டு படத்தை பாராட்டும் வகையில் பஞ்சமி நிலம் குறித்த ஒரு கருத்தை அவர் கூறினார். உடனே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் முரசொலியை நிலமே பஞ்சமி நிலம் தான் என்று கூற, இந்த விவகாரம் பெரும் தீயாக பற்றிக் கொண்டது

இதற்கு விளக்கம் அளிக்க முடியாமல் திமுகவினர் திணறி வருகின்றனர். முரசொலி கட்டிடத்தின் பத்திரத்தை காண்பிப்பதாக திமுக-தலைவர் கூறினாலும் இன்றுவரை அந்த இடத்திற்கு உண்டான ஆதாரங்களை அவர் காண்பிக்காமல் இழுத்தடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சியான தந்தி டிவியில் நேற்று இது குறித்து ஒரு விவாதம் நடந்தது. அதில் திமுக சார்பில் கலந்துகொண்ட ஜெயராஜ் என்பவர் முரசொலி இருந்த இடத்தில் ஆதிதிராவிடர் விடுதி இருந்தது உண்மைதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதனை அடுத்து திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்
தங்களது உண்மை வெளிவருகிறது என்பதை அறிந்து தானோ என்னவோ இனிமேல் அந்த தொலைக்காட்சியில் திமுகவினர் யாரும் பங்கேற்க கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ’தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளும் கழகத் தோழர்கள் கவனத்திற்கு! கழகத்தின் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளும் கழகத் தோழர்கள் இனி வருங்காலங்களில் தந்தி தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Continue Reading

அதிகம் படித்தவை

To Top