Connect with us

ஐஸ்வர்யா-அபிஷேக்பச்சன் பிரிகின்றார்களா?

பொழுதுபோக்கு

ஐஸ்வர்யா-அபிஷேக்பச்சன் பிரிகின்றார்களா?

முன்னாள் உலக அழகியும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யாராய், கடந்த 2007ஆம் ஆண்டு அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில் அபிஷேக்பச்சனும், ஐஸ்வர்யாராயும் கடந்த சில மாதங்களாக கருத்துவேறுபாடுடன் இருப்பதாகவும், விரைவில் இருவரும் பிரிய முடிவு செய்திருப்பதாகவும் இணையதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது. ஆனால் அபிஷேக் குடும்பத்தினர் இது வதந்தி என்றும் இதில் உண்மை இல்லை என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து அபிஷேக்பச்சன் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘தயவு செய்து தவறான தகவலை வெளியிட வேண்டாம். பொறுப்புணர்வுடன் உண்மை தகவலை மட்டும் வெளிப்படுத்துங்கள்’ என்று கூறியுள்ளார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top