ஐசிசி தரவரிசை: விராத் கோஹ்லி, பும்ரா முதலிடம்


இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் போட்டிகளில் வரலாற்று சாதனை செய்து வரும் நிலையில் விரைவில் நியூசிலாந்து அணியுடன் ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது.

இந்த நிலையில் ஐசிசி-யின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை தற்போது வெளிவந்துள்ளது. இந்த தரவரிசையில் விராட் கோலி வழக்கம்போல் பேட்ஸ்மேனில் முதலிடத்திலும் பும்ரா பந்துவீச்சில் முதலிடத்திலும் உள்ளனர்.

பேட்ஸ்மேன்கள் தரவரிசை: விராத் கோஹ்லி (இந்தியா), ரோஹித் சர்மா (இந்தியா), டெய்லர் (நியூசிலாந்து), ஜோ ரூட் (இங்கிலாந்து), பாபர் ஆசம் (பாகிஸ்தான்), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), டு பிளிசிஸ் (தென் ஆப்பிரிக்கா), ஹோப் (வெஸ்ட் இண்டீஸ்), தவான் (இந்தியா), குயிண்டன் டி காக் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் உள்ளனர்.

அதேபோல் பந்துவீச்சு தரவரிசையில் பும்ரா (இந்தியா), ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்), குல்தீப் யாதவ் (இந்தியா), ரபாடா (தென் ஆப்பிரிக்கா) முஸ்டாபிஷூர் ரகுமான் (வங்காள தேசம்) ஆகியோர் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.