ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல்

ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல்

a.r.murugadossவிஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படத்தில் அரசியல் குறித்த அசில சர்ச்சைக்குரிய கருத்துகளும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்த சில காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், சர்கார் படத்தின் பேனர்கள் கிழிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் காட்சிகளும் ரத்தானது. இந்த நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி சென்னை ஐஅகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். நேற்று நள்ளிரவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கு போலீஸ் வந்ததால் கைதாவதை தவிர்க்க முன் ஜாமீன் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.