ஏ.ஆர்.முருகதாஸ் மீது மேலும் 3 பிரிவுகளில் வழக்கு!


விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த தீபாவளி தினத்தில் வெளிவந்த சர்கார்’ திரைப்படத்தில் அரசின் இலவச பொருட்கள் குறித்து சர்ச்சைக்குரிய காட்சி வைத்ததற்காக அவர் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏ.ஆர்.,முருகதாஸ் இந்த வழக்கிற்காக ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் தேவராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

சர்கார் திரைப்படம் கிட்டத்தட்ட பெரும்பாலான திரையரங்குகளில் தூக்கிவிட்ட போதிலும் அதன் சர்ச்சை மட்டும் இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளது.