Connect with us

எவிக்சன் பிராஸசில் வச்சு செஞ்ச பிக்பாஸ்: போட்டியாளர்கள் அதிர்ச்சி

பொழுதுபோக்கு

எவிக்சன் பிராஸசில் வச்சு செஞ்ச பிக்பாஸ்: போட்டியாளர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று எவிக்சன் பிராசஸ் நடைபெற்றது. அதில் இந்த வாரம் வித்தியாசமாக காப்பாற்றப்படும் நபர்களின் பெயர்களை போட்டியாளர்கள் அறிவிக்கவேண்டும் என்றும், யார் காப்பாற்றப் படாதவர்கள் பட்டியலில் இருக்கின்றார்களோ அவர்கள் தான் இந்த வாரம் எவிக்சன் பட்டியலில் உள்ளவர்கள் என்றும் பிக்பாஸ் கூறியிருந்தார்

மேலும் ஒவ்வொரு நபரையும் காப்பாற்ற ஒரு பச்சை மிளகாயை சாப்பிட வேண்டும் என்றும் பிக்பாஸ் நிபந்தனை விதித்திருந்தார். இதனை அடுத்து கவின், சாண்டி, ஷெரின், தர்ஷன், முகின் மற்றும் லாஸ்லியா ஆகிய ஆறு பேர்களும் ஒவ்வொருவராக கன்ஃபக்சன் அறைக்கு வந்து தாங்கள் காப்பாற்ற விரும்பும் நபர்களை கூறினார்

அதன் பிறகு எவிக்சன் பிராசஸ் முடிவு பெற்றதாக அறிவித்த பிக்பாஸ், நீங்கள் யாரும் பச்சை மிளகாயை சாப்பிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், ஏனெனில் இறுதிப்போட்டியில் தகுதி பெற்ற முகின் தவிர அனைவரும் இந்த வாரம் எவிக்சன் பட்டியலில் இருக்கின்றீர்கள் என்று கூறியவுடன் போட்டியாளர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. எவிக்சன் பிராசஸ் என்ற பெயரில் போட்டியாளர்களை வச்சு செஞ்ச பிக்பாஸ் இன்றைய ஹீரோவாக திகழ்கிறார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top