என் படத்திற்கும் இதேபோல் விளம்பரம் செய்திருகலாமே! அதிமுகவினர்களுக்கு சி.எஸ்.அமுதன் கேள்வி

என் படத்திற்கும் இதேபோல் விளம்பரம் செய்திருகலாமே! அதிமுகவினர்களுக்கு சி.எஸ்.அமுதன் கேள்வி

cs amudhan

சர்கார் திரைப்படத்திற்கு பிரச்சனை செய்யும் அதிமுகவினர் என்னுடைய படமான ‘தமிழ்ப்படம் 2’ வெளிவந்தபோது ஏன் பிரச்சனை செய்யவில்லை என்றும், என் படத்திற்கும் பிரச்சனை செய்திருந்தால் அந்த படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்திருக்கும் என்றும் இயக்குனர் சி.எஸ்.அமுதன் தனது டுவிட்டரில் ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார்.

சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கிய ‘தமிழ்ப்படம் 2’ படத்தில் ஆட்சியாளர்களை கிண்டல் செய்யும் வகையில் அதாவது சமாதியில் ‘தியானம் செய்வது’, ‘பதவியேற்கும்போது கண்ணீர்விடுவது’ போன்ற காட்சிகள் இருந்தன. ஆனால் இந்த காட்சிகளை அதிமுகவினர் கண்டு கொள்ளவில்லை. இதனையே சி.எஸ்.அமுதன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதிகள் இனிமேலாவது பாரபட்சம் இன்றி விஜய் படம் மட்டுமின்றி அனைத்து படங்களுக்கும் புரமோஷன் செய்யுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.