என்னை கட்சி அலுவலகத்தில் நுழைய் விடமாட்றாங்க: எஸ்.வி.சேகர்


தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜனுக்கும் பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகருக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வரும் நிலையில் தன்னை பாஜக கட்சி அலுவலகத்துக்குள் நுழைய தமிழிசாஇ ஆதரவாளர்கள் அனுமதிப்பதில்லை என எஸ்.வி.சேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நேற்று எஸ்.வி.சேகர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தலைவர்களை மாற்றுவதால் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற முடியாது என்றும், ராகுல்காந்தி மீது நம்பிக்கை இல்லாததால் தான், பிரியங்கா காந்தியை களம் இறக்கியுள்ளதாகவும் கூறினார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளை போன்றவர் பிரதமர் மோடி என்றும் அவரை பிரியங்கா காந்தி உள்பட யார் வந்தாலும் அடக்க முடியாது என்றும் தெரிவித்தார்.