எச்.ராஜாவை அடுத்து ‘சர்காருக்கு புரமோஷன் செய்யும் அமைச்சர்

விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் சுமாராக இருப்பதாக விமர்சனங்கள் வெளிவந்துள்ள நிலையில் பாஜகவும், அதிமுகவும் மாறி மாறி இந்த படத்திற்கு நெகட்டிவ் புரமோஷன் செய்து வருவதால் இந்த படத்தையும் ‘மெர்சல் போல் ஹிட்டாக்கிவிடுவார்கள் போல் தெரிகிறது.

இந்த படம் குறித்து சற்றுமுன்னர் பேட்டியளித்த தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘சர்கார் படத்தில் அரசின் விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சியை அவர்களாகவே நீக்கினால் நல்லது, இல்லையெனில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சர்கார் படத்தில் அரசியல் உள் நோக்கத்துடன் பல காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது அழகல்ல என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் கதைத்திருட்டு குறித்த ஒரு டுவீட்டை எச்.ராஜா பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.