Connect with us

உள்ளாட்சி தேர்தல் தேதி: மீண்டும் சுப்ரீம் கோர்ட்டி திமுக மனுதாக்கல்?

செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் தேதி: மீண்டும் சுப்ரீம் கோர்ட்டி திமுக மனுதாக்கல்?

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என்று சற்று முன்னர் தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது

இந்த அறிவிப்பை அடுத்து வரும் திங்கள் முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் திடீரென உள்ளாட்சித் தேர்தல் தேதியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் நாடப் போவதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் சற்றுமுன் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

உச்ச நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் வகையில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பதாகவும் இதனால் உள்ளாட்சி தேர்தல் தேதியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை நாடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று முக ஸ்டாலின் சற்றுமுன் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்

இதனை அடுத்து திங்கட்கிழமை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது

வரும் திங்கட்கிழமை இது குறித்த மனுவை திமுக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய இருப்பதாகவும் அன்றைய அந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு முக்கிய உத்தரவு ஏதும் பிறப்பிக்குமா? என்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Continue Reading
To Top