Connect with us

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டதாக தமிழக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்துள்ளது.

தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு திரும்ப பெறப்பட்டதாக தேர்தல் ஆணைய செயலாளர் சுப்ரமணியன் சட்டப்பூர்வ ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளார்

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அடுத்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்தல் இல்லை என்றும், உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

முன்னதாக மறுவரையறை செய்யப்படாத ஒன்பது மாவட்டங்களில் தேர்தல் நடத்தக்கூடாது என்றும் மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்றும் திமுக தொடுத்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top