Connect with us

உள்ளாட்சி தேர்தலை நிறுத்த திமுக மீண்டும் ஒரு மனு?

செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை நிறுத்த திமுக மீண்டும் ஒரு மனு?

ஒருபுறம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தங்களுக்கு எந்தவித தயக்கமும் இல்லை என்றும் கூறி வரும் திமுக, இன்னொருபுறம் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த தொடர்ச்சியாக மனுக்களை தாக்கல் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

திமுக சார்பில் கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் தீர்ப்பு சமீபத்தில் வெளிவந்து மறு வரையறை செய்யப்படாத மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று தீர்ப்பு வெளியானது

இதனையடுத்து இன்று உள்ளாட்சி தேர்தலின் புதிய தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் திடீரென திமுக தரப்பில் இருந்து தமிழக தேர்தல் ஆணையத்திற்கு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் ’இட ஒதுக்கீடு சட்ட விதி முறைப்படி செய்த பின்னர்தான் தேர்தலை அறிவிக்க வேண்டும் என்றும், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை சட்ட விதிப்படி வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது

இந்த மனு மீதான விசாரணை முடிந்த பின்னர்தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுமா? அல்லது இன்று திட்டமிட்டபடி தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Continue Reading
To Top