உதயநிதியை பார்க்க தள்ளு முள்ளு இருவர் காயம்

திமுக தலைவர் ஸ்டாலினின் மகனும் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் சினிமாவோடு சேர்ந்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தன் தந்தையோடு பெரும்பாலான கூட்டங்களுக்கு செல்கிறார்.

உதயநிதி தற்போது இளையராஜா இசையில் மிஷ்கினின் இயக்கத்தில் சைக்கோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். சினிமா அரசியல் பணிகளுக்கு இடையில் சமூக பணிகளையும் கவனித்து வருகிறார்.

சமீபத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு உதயநிதியின் ரசிகர் மன்றத்தினர் பல்வேறு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். சில இடங்களுக்கு நேரில் சென்று  நிவாரணங்களை உதயநிதியே வழங்கி வருகிறார்.

இப்படியாக புதுக்கோட்டை அருகே நிவாரணத்துக்கு சென்ற போது உதயநிதியை பார்க்க தள்ளு முள்ளு ஏற்பட்டு இருவர் காயமடைந்தனர் என தகவல்கள் தெரிவிக்கிறது.