இருந்தாலும் தோனி கொஞ்சம் கவனத்துடன் இருந்திருக்கலாமே…!!!!

லண்டன்:

உலகக் கோப்பை தொடரின் மிக முக்கியமான லீக் ஆட்டமான இந்தியா பாகிஸ்தான் போட்டி நேற்று மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. மூன்று முறை இந்த போட்டியில் மழை குறுக்கிட்டது. இருப்பினும் ஆட்டம் நிறுத்தப்படாமல் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்பட்டது, இதனால் பாகிஸ்தான் இன்னிங்ஸ் மட்டும் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

7 வது முறையாகப் படும்தோல்வி:

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 50 ஓவரையும் முழுமையாக ஆடி இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. 40 ஓவரில் 212 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் டக் வொர்த் லீவிஸ் முறையில் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

தோனி அப்படி என்னதான் செய்தார் :

இருந்தாலும் தோனி கொஞ்சம் கவனத்துடன் இருந்திருக்கலாமே…!!!!

குல்தீப் போட்ட ஓவரில் தோனி ஒரு தவறு செய்தார். பாகிஸ்தானின் முக்கியமான வீரரான பாபர் அசமின் அதிரடி ஆட்டத்தை சமாளித்து அவரின் விக்கெட்டை எப்படி எடுப்பது என்று தெரியாமல் இந்திய அணியின் வீரர்கள் யோசனையில் இருந்தனர். அப்போது சரியாக பாபர் குல்தீப் ஓவரில் எல்பிடபில்யூ முறையில் அவுட்டானார். 

ஆனால் நடுவர் இதற்கு அவுட் கொடுக்கவில்லை. இதை சரியாக கவனித்த கோலி டிஆர்எஸ் எடுக்கலாமா என்று தோனியிடம் கேட்க, தோனி பந்து பேட்டில்தான் பட்டது என்று கூறினார். இதனால் கோலி தோனியின் பேச்சை கேட்டு எல்பிடபிள்யூ கேட்கவில்லை. 


சே கொஞ்சம் சரியாப் பார்த்திருக்கலாம்ல :

ரீப்ளேயில்தான் உண்மை தெரியவந்தது. அப்போது பந்து பேட்டில் படவில்லை என்றும், பேடில்தான் பட்டது என்றும் தெரிந்தது. நடு ஸ்டம்பை நோக்கி பந்து சென்றுள்ளது. அதனால் இது விக்கெட்தான் என்பது தெளிவாக தெரியவந்தது. தோனியின் பேச்சைக் கேட்டு கோலி டிஆர்எஸ் கேட்கவில்லை. இதனால் அந்த விக்கெட்டை வீழ்த்த முடியாமலே போய்விட்டது. 

இதுவரை இப்படி நடந்ததே இல்லையே :

தோனி மிக சரியான நேரத்தில் டிஆர்எஸ் கேட்டு, விக்கெட்டுகளை வீழ்த்துபவர். ஆனால் இந்தப் போட்டியில் சற்று கவனக்குறைவால் இவ்வாறு நிகழ்ந்துவிட்டது. இருந்தாலும் கவலை கொள்ளவே வேண்டாம். எப்படியும் இந்தியா பாகிஸ்தானை வென்றுவிட்டது எனக் கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.