Connect with us

இரவோடு இரவாக வெங்காய அறுவடை செய்த திருடர்கள்: விவசாயி அதிர்ச்சி

செய்திகள்

இரவோடு இரவாக வெங்காய அறுவடை செய்த திருடர்கள்: விவசாயி அதிர்ச்சி

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜிஜேந்திரகுமார் என்ற விவசாயி தனக்கு சொந்தமான 1.6 ஏக்கர் நிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெங்காயம் பயிர் செய்து இருந்தார். தற்போது வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில் அவர் தனக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார்

இந்த நிலையில் நேற்று காலை அவர் தனது வயலுக்கு வெங்காய அறுவடை செய்ய கூலி ஆட்களுடன் சென்றபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏற்கனவே மர்ம நபர்கள் சிலர் அவருடைய நிலத்தில் இருந்த அனைத்து வெங்காயத்தையும் அறுவடை செய்து திருடிச் சென்று விட்டனர்

இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த விவசாயி ஜிஜேந்திரகுமார் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறை அதிகாரிகள் அவருடைய நிலத்தை பார்வையிட்டபோது இரவோடு இரவாக திருடர்கள் வெங்காய அறுவடை செய்து வெங்காயத்தை திருடி சென்றது தெரிய வந்தது

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வெங்காய அறுவடை செய்து திருடிய திருடர்களை வலைவீசி தேடிவருகின்றனர் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதன் திருட்டும் அதிகரித்து வருவது பொது மக்களையும் விவசாயிகளையும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top