இயக்குனர் ரஞ்சித் மீது தஞ்சை மாவட்ட எஸ்.பியிடம் புகார்

இயக்குனர் ரஞ்சித் இரண்டு தினங்களுக்கு முன் நீலப்புலிகள் நிறுவனத்தலைவர் உமர் பாரூக் என்பவரின் நினைவேந்தல் கூட்டத்தில் பேசினார். இந்த கூட்டத்தில் பேசிய கபாலி, காலா, மெட்ராஸ் பட இயக்குனர் ரஞ்சித் தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழ மன்னனின் காலம் பொற்காலம் என சொல்லப்படுகிறது அது இருண்ட காலம்.

தேவதாசி முறையை கொண்டு வந்தவன் ராஜராஜன். எம் மக்களின் நிலத்தை பறித்தவன் ராஜராஜன் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

சமூகத்திலும் சமூக வலைதளத்திலும் மிகப்பெரும் எதிர்வினைகளை உருவாக்கிய இந்த பேச்சால் மக்கள் ரஞ்சித் மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர்.

இதற்கிடையே முதன் முறையாக தஞ்சை மாவட்ட எஸ்.பி மகேஸ்வரனை நேரில் சந்தித்து அம்மாவட்ட இந்துமக்கள் கட்சி தலைவர் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் ஒன்றை அளித்துள்ளார்.