Connect with us

இன்று இலங்கை தேர்தல்: கோத்தபய, சஜித் பிரேமதாசா இடையே கடும்போட்டி!

செய்திகள்

இன்று இலங்கை தேர்தல்: கோத்தபய, சஜித் பிரேமதாசா இடையே கடும்போட்டி!

இலங்கையில் இன்று அடுத்த அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றது. இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியிருக்கும் நிலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முக்கிய வேட்பாளர்களாக ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாசா, இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடும் கோத்தபய ராஜபக்சே மற்றும் மக்கள் கட்சி வேட்பாளரான அனுரா குமாரா திசநாயக ஆகியோர் கருதப்படுகின்றனர். தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் கோத்தபயாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

சஜித் பிரேமதாசா முன்னாள் அதிபரான மறைந்த ரணசிங்க பிரேமதாசாவின் மகன் என்பதும் கோத்தபய முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதர் என்பதும் தெரிந்ததே.

1.6 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ள நிலையில் இந்த தேர்தலில் தமிழர்கள் வாக்குகள் அதிபரை தேர்வு செய்யும் ஒரு பெரும் சக்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top